சிவப்பு லேபிள் கொண்ட கொள்கலன்கள், பரிசீலிக்காமல் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
ஆய்வு செய்யப்பட வேண்டிய ஏராளமான சிவப்பு லேபிள் கொண்ட 323 கொள்கலன்கள், எந்தவொரு பரிசீலனையும் இல்லாமல் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
பரிசீலிக்காமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் பெரும்பாலானவை சிவப்பு லேபிளின் கீழ் கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டிய கொள்கலன்கள் என்று சங்கத்தின் தலைவர் அமில சஞ்சய சுட்டிக்காட்டுகிறார்.
அத்தகைய கொள்கலன்களை விடுவிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அவர் கூறினார், அவற்றை பரிசீலிக்காமல் சமூகத்தில் விடுவிப்பதன் மூலம், அவற்றில் ஆயுதங்கள், போதைப்பொருட்கள், போலி மருந்துகள் மற்றும் சட்டவிரோத பொருட்களும் இருக்கலாம் எனக் கூறிய அவர் , யார்டுகளில் பணிபுரியும் சுங்க அதிகாரிகள் இந்த விஷயங்களுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று அவர் ஊடக சந்திப்பின் போது மேலும் கூறினார்.
இந்த நடவடிக்கைகள் சுங்க இயக்குநரின் அறிவுக்கேற்ப நடந்ததாகக் கூறும் அவர், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இன்று தனது கடமைகளை ராஜினாமா செய்துள்ளார்.