பொதுப் போக்குவரத்திற்காக புதிய பேருந்துகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் – அரசாங்கம் (Video)!
பயணிகள் போக்குவரத்திற்கு பாதுகாப்பான மற்றும் உயர்தர பஸ்களை பயன்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
அதன்படி, நாட்டில் பயணிகள் போக்குவரத்திற்காக புதிய பஸ்களை பெறுவது தொடர்பாக போக்குவரத்து அமைச்சகம் பல நாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள சட்டவிரோத உபகரணங்களை அகற்றும் திட்டம் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
வாகன இறக்குமதி குறித்தும் அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.