மஹிந்த பிரதமராக இருந்த காலத்தில் பணியாற்றிய , முன்னாள் பிரதமரின் செயலாளர் கைது!

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பிரதமரின் செயலாளராகப் பணியாற்றிய எஸ். அமரசேகர கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசுக்குச் சொந்தமான இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியபோது, பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை தொடர்பாக இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.