வாழைச்சேனை பகுதியில் வீட்டிற்குள் நுழைந்து, கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரந்தரச்சேனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து வாழைச்சேனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கிடைத்த செய்தியின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பிரந்தரச்சேனை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், இறந்தவருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே தனிப்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து, இந்தக் கொலையை அவரது சகோதரர் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
சடலம் வாழைச்சேனை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரைக் கைது செய்வதற்காக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.