பொதுவான திருமண வயது வரம்பை மறுசீரமைப்பது குறித்து கவனம் …
இந்த நாட்டில் திருமண வயதை ஒரு பொதுவான வயதிற்குக் கொண்டுவருவதற்கான முன்மொழிவை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் சமர்ப்பித்துள்ளது.
மன்றத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ், இலங்கையில் திருமண வயதை மறுசீரமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
திருமண வயதை ஒரு பொதுவான வயதிற்குக் கொண்டுவருவதற்குத் தேவையான திருத்தங்களைத் தயாரிப்பதற்கு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொடர்புடைய தரப்பினரிடமிருந்து பரிந்துரைகளைப் பெறவும், மன்றத்தின் மூலம் இறுதிப் பரிந்துரைகளைத் தயாரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.