மன்னார் இரட்டைக் கொலையின் சூத்தரதாரி வெளிநாடொன்றில் வசிப்பதுடன் இராணுவத்துடன் தொடர்புடையவர்களை வைத்து மேற்கொண்டுள்ளார் .
மன்னார் நீதிமன்ற வாசலில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் எதிர்வரும் 29ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்
இந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர் இராணுவ புலனாய்வாளர்கள் என அiடாளம் காணப்பட்ட நிலையில் மேலும் ஒரு சந்தேக நபரை அண்மையில் பொலிஸார் கைது செய்தனர்.
மன்னாரைச் சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறுதியாக கைது செய்யப்ட்ட நபர் கொலை சம்பவத்திற்கு உதவியதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கொலையின் சூத்தரதாரி வெளிநாடொன்றில் வசிப்பதுடன் இராணுவத்துடன் தொடர்புடையவர்களை வைத்து இந்த கொலைகளை அவர் செய்துள்ளமை தெரியவந்தள்ளது.
மன்னார் நீதிமன்ற வாசலில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் எதிர்வரும் 29ம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்
இந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர் இராணுவ புலனாய்வாளர்கள் என அiடாளம் காணப்பட்ட நிலையில் மேலும் ஒரு சந்தேக நபரை அண்மையில் பொலிஸார் கைது செய்தனர்.
மன்னாரைச் சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறுதியாக கைது செய்யப்ட்ட நபர் கொலை சம்பவத்திற்கு உதவியதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கொலையின் சூத்தரதாரி வெளிநாடொன்றில் வசிப்பதுடன் இராணுவத்துடன் தொடர்புடையவர்களை வைத்து இந்த கொலைகளை அவர் செய்துள்ளமை தெரியவந்தள்ளது