யாழில் பரா ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்ற தகுதியானவர்களுக்கான தெரிவு.
மாவட்ட மட்டத்தில் அங்கவீனமுற்ற நபர்களுக்கான மாவட்ட பரா ஒலிம்பிக் குழுவொன்றை அமைத்தல், செயன்முறை விளக்கம் மற்றும் தெரிவு தொடர்பான ஒரு நாள் பயிற்சிப்பட்டறையானது (24.01.2025) காலை 08.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் அறிமுகவுரையுடன் ஆரம்பமாகியது.
அதனைத் தொடர்ந்து, அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் பரா ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்ற தகுதியானவர்களுக்கான தெரிவும் இடம்பெற்றது. இதில் 50 பேர் பங்குபற்றினார்கள். அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகத்தில் மாவட்ட பரா ஒலிம்பிக் கழகம் உருவாக்கப்பட்டது. இந் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க.ஸ்ரீமோகனன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி மற்றும் தேசிய பரா ஒலிம்பிக் குழுவின் உப தலைவர் திரு. பிரியந்த பீரிஸ் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
மேலும் இந் நிகழ்வில் பரா ஒலிம்பிக் பயிற்றுவிப்பாளர் திரு. விமுக்தி டீ சொய்சா, சர்வதேச பரா ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றி பதக்கங்களை பெற்ற வீரர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.
இன்றைய பயிற்சிப் பட்டறைக்கான அனுசரணையினை டயலொக் நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.