பாஜக மாநில தலைவராக அண்ணாமலை மீண்டும் தேர்வாகி உள்ளதாகத் தகவல்.
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை மீண்டும் தேர்வு? – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை மீண்டும் தேர்வாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் புதிதாகத் தேர்வு செய்யப்படுவார்கள். இதன்படி, ஒருவர் தலைவர் பதவியில் இருமுறை இருக்கலாம். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டு பாஜக உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
தொடர்ந்து கிளைத் தலைவர்கள், மண்டல தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் என பல்வேறு பதவிகளுக்கு வாக்குப்பதிவு அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் தமிழக பாஜக தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் அதிகாரியாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பிய போது நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை உள்ளிட்டோர் பெயர்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை மீண்டும் தேர்வாகி உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் புதுச்சேரி மாநில பாஜக தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் அதிகாரியாகத் தரும் சூக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அந்தமான் யூனியன் பிரதேச பாஜக தலைவரை தேர்வு செய்வதற்காக தமிழிசை சௌந்தரராஜன் தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் மாவட்ட தலைவர்களுக்கு தேர்தல் இல்லாமல், ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் மாநில தலைவராக ஒருமனதாக மீண்டும் அண்ணாமலையே தேர்வு செய்யப்பட உள்ளார். இதன் அறிவுப்பு ஜன.26 அல்லது 28-ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.