அதானியின் காற்றாலைகள் சம்பந்தமான செய்தி அப்பட்டமான பொய்..- நளிந்த ஜயதிஸ்ஸ.
அதானி குழுமத்தின் பூநகரி மற்றும் மன்னார் காற்றாலை மின் திட்டங்களை அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட இந்த திட்டத்தை மறுஆய்வு செய்ய மட்டுமே அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், இந்த திட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், நாட்டு மக்களுக்கும் எரிசக்தித் துறைக்கும் பயனளிக்கும் வகையில் ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.