யோஷிதவுக்கு விளக்கமறியல்…
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் இன்று (25.01)பெலியத்த பகுதியில் கைது செய்யப்பட்ட அவர்
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.