33 இந்திய மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டதற்காக இலங்கை கடற்படையால் கைது.

இலங்கை கடற்படை இன்று (26) காலை மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 33 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது, மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள், சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்படும் என்று கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மற்றும் 33 மீனவர்கள் இரணைதீவுக்கு கொண்டு வரப்பட்டு, அடுத்தகட்ட விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடரப்படவுள்ளன.

பிந்திய செய்தி 

கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் நேற்று (25) இரவு மற்றும் இன்று (26) அதிகாலை சிறப்புத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் முப்பத்து மூன்று (33) இந்திய மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை தலைமன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை வட மத்திய கடற்படை கட்டளை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கைக்காக வடக்கு கடற்படை கட்டளை மற்றும் கடலோர காவல்படை இணைந்த விரைவுத் தாக்குதல் கப்பல்களும், வட மத்திய கடற்படை கட்டளையின் கடலோர காவல்படை கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டன.

நடவடிக்கையின் போது, மூன்று (03) இந்திய மீன்பிடி படகுகளும், அதில் இருந்த முப்பத்து மூன்று (33) மீனவர்களும் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக இரணைதீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி உதவி மீன்வள இயக்குநரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.