காலி சிறைச்சாலைக்குள் அடிதடி : சிறப்பு அதிரடிப்படையினருக்கு அழைப்பு.
காலி சிறைச்சாலையில் இரண்டு கைதி குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது நான்கு கைதிகள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த கைதிகள் சிகிச்சைக்காக காலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து மோதல் வெடித்தது.
நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் சிறப்புப் படையினரும் பொலிஸ் அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டனர்.