கிரீன்லந்தை வாங்க முயன்ற அமெரிக்க டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்பதற்கு முன், டென்மார்க் பிரதமரிடம் கிரீன்லந்தை வாங்குவது குறித்துப் பேசியதாய் ஐரோப்பிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் இருவருக்குமிடையே நடந்த தொலைபேசி உரையாடல் சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாகக் கூறப்பட்டது.

தமது கோரிக்கையை பிரதமர் மெட்டா ஃபிரெடரிக்சன் (Mette Frederiksen) மறுத்ததால் திரு டிரம்ப் மிகவும் கடுமையாகப் பேசினார் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மேலும் தம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் டென்மார்க் மீது வரிகள் விதிக்கப்படும் என அவர் மிரட்டியுள்ளதாகச் சொல்லப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகிய காரணங்களுக்காக கிரீன்லந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது அவசியம் என்றார்.

தேவைப்பட்டால் அதற்கு ராணுவ பலத்தைப் பயன்படுத்தும் சாத்தியத்தை அவர் நிராகரிக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.