பென்சில்களுக்குள் மறைந்திருக்கும் ஆபத்து ..! குழந்தைகளை பாதுகாக்கவும்!
சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பென்சில்களில் குழந்தைகளின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல இரசாயனங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பென்சில்களை வாயில் வைத்து சப்பும் குழந்தைகள் பல நீண்டகால நோய்களால் பாதிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில்கள் இன்று சந்தையில் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன.
இறக்குமதி செய்யப்பட்ட பென்சில்கள் வண்ணமயமான மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தால் குழந்தைகள் அவற்றை வாங்க மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
பென்சிலால் எழுதும்போதும், பென்சிலை கூர்மையாக்கும்போதும், குழந்தைகள் தங்களை அறியாமலேயே பென்சிலை வாயில் வைத்து மென்று சாப்பிடுகிறார்கள். இந்த கவர்ச்சியை அடைய, பென்சில்கள் அதிக அளவு இரசாயனங்கள் மற்றும் பாதரசம், ஆர்சனிக் மற்றும் காட்மியம் போன்ற கன உலோகங்களால் பூசப்பட வேண்டும்.
எனவே, குழந்தைகள் பென்சில்களை மெல்லும்போது அவர்களின் உடலில் நுழையும் இந்த ரசாயனங்களின் விளைவுகள் கொஞ்சநஞ்சமல்ல.
பென்சில்கள் மற்றும் வண்ண பென்சில்கள் உற்பத்திக்கு ஒரு சர்வதேச தரநிலை உள்ளது, மேலும் EN71-3 தரநிலைக்கு சான்றளிக்கப்பட்ட பென்சில்கள் 19 வகையான கன உலோகங்களிலிருந்து உடலுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றன.
இருப்பினும், தற்போது சந்தையில் உள்ள பல பென்சில்கள் இந்த சர்வதேச தரத்திற்கானதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.