மன்னாரில் வீடொன்று முற்றாகத் தீக்கிரை.
மன்னார் சாந்திபுரம் பகுதியில் இன்று (27.01) திங்கள்,காலை குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக வீடு முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது. கிராம மக்களினால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மன்னார் சாந்திபுரம் சிறுவர் பூங்காவிற்குப் பின் பகுதியில் உள்ள வீடொன்றே தீப்பற்றி எரிந்தது. அயலில் உள்ள மக்கள் விரைவாகச் செய்யப்பட்டதனால் தீப்பரவல் அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவ முன்னதாக அணைக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் மன்னார் மின்சார சபை, மன்னார் நகர சபையின் தீயணைப்பு வாகனம் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன் முழுமையாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
குறித்த தீ பரவல் காரணமாக எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லையெனினும் வீட்டில் காணப்பட்ட உடமைகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.