நாமல் ராஜபக்ஷ கைது..?
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
2029 ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ நாட்டின் ஜனாதிபதியாகிவிடுவார் என அரசாங்கம் மிகவும் அஞ்சுவதாகவும், அதனால்தான் அரசாங்கம் அவரை சிறையில் அடைக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சி செய்ய முடியாத அளவுக்கு ராஜபக்சே மீதான அச்சம் அவர்களிடையே தலைதூக்கத் தொடங்கியுள்ளது என்றும், இதன் விளைவாக, ராஜபக்ஷக்களை குறிவைத்து வேட்டையாடும் நடவடிக்கை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
யோஷித ராஜபக்ஷவை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்திய நேரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சட்டத்தரணி மனோஜ் கமகே இவ்வாறு தெரிவித்தார்.