இந்தியா,இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ‘டி-20’ போட்டி இன்று…

மூன்றாவது ‘டி-20’ போட்டி இன்று ராஜ்கோட்டில் நடக்க உள்ளது. இதில் இந்தியா அசத்தினால், ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் தொடரை கைப்பற்றலாம்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டி கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்கிறது. கோல்கட்டா (7 விக்.,), சென்னையில் (2 விக்.,) நடந்த போட்டியில் வென்ற இந்திய அணி, 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது போட்டி இன்று குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடக்கிறது.
இங்கிலாந்து அணி இன்று வென்றால் மட்டுமே தொடரை இழக்கும் அபாயத்தில் இருந்து தப்ப முடியும். ராஜ்கோட் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இங்கு இந்தியா விளையாடிய 5 ‘டி-20’ போட்டியில் 4ல் வென்றது (1 தோல்வி). இங்கு இந்தியா, இங்கிலாந்து அணிகள் முதன் முறையாக மோத உள்ளன. போட்டி நேரத்தில் வானம் தெளிவாக இருக்கும். மழை வர வாய்ப்பில்லை.