இலங்கையில் இன்று மாத்திரம் 87 பேருக்குக் கொரோனா உறுதி
இலங்கையில் இன்று 87 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்களே தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தலில் இருந்தவர்களும், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுமே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 164 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 625 ஆக அதிகரித்துள்ளது. அதில் 3 ஆயிரத்து 440 பேர் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 172 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பேர் சிகிச்சைகளின்போது உயிரிழந்துள்ளனர்.