ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணையாது : வெறும் கூட்டணிதான்.
ஐக்கிய தேசியக் கட்சியும் , ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒரே மேடையில் இருந்து தேர்தல் பிரச்சாரம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியும் , ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவதற்குத் தயாரா என்று கேட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்.
மேலும் தனது கருத்துக்களைத் தெரிவித்த அவர், இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைப்பது குறித்து தெளிவான முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார்.
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பே, வலுவான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புவது குறித்த கலந்துரையாடல்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் , ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் தொடங்கின.
தற்போதைய சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதில் வலுவான வலதுசாரி முகாம் தொடர்பாக முன்வைக்கப்படும் முன்மொழிவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, விவாதங்கள் புதிய திசையில் முன்னேறத் தொடங்கியுள்ளன என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர்.