கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாமல் ராஜபக்ச மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

சட்டமா அதிபர் இந்தக் குற்றப்பத்திரிகைகளை கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளார்.

ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாகக் கூறி, இந்திய நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று குற்றவியல் முறைகேடு செய்ததாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்தக் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிக்கை செய்திருந்தது, மேலும் நாமல் ராஜபக்ஷ இந்த வழக்கில் ஒரு சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.