இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் பதவி விலகினாரா…?
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வந்தாலும், அவை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ஷவும் தனது சமூக ஊடக கணக்கில் ஒரு குறிப்பை பதிவிட்டு ரமால் சிறிவர்தன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.