மலேசியா நிலச்சரிவில் ஒருவர் பலி, பலர் படுகாயம்.

மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் மிரி (Miri) என்ற இடத்தில் நடந்த நிலச்சரிவில் 2 வீடுகள் புதையுடண்டதில் ஒருவர் மாண்டார்.அந்த வீடுகளில் 12 பேர் இருந்தனர்.

மீட்புப் பணிகள் நடைபெறுவதாக மலேசிய ஊடகம் New Strait Times கூறியது.

நிலச்சரிவில் ஒருவர் மாண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

கனத்த மழையை அடுத்து இன்று அதிகாலை 4.55 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு வீட்டில் 7 பேர் இருந்தனர்; மற்றொன்றில் 5 பேர் இருந்தனர். அந்த ஐவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

மாண்டவர் பதின்ம வயது இளையர். அவரது உடல் காலை மணி 6.17க்குக் கண்டெடுக்கப்பட்டது.

எஞ்சியிருப்போரைத் தேடி மீட்கும் பணி நீடிக்கிறது.

இதற்கு முன்னர் 2009ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் வெளிநாட்டு ஊழியர்கள் இருவர் உயிருடன் மண்ணில் புதைந்து மாண்டனர்.

காடுகளை அழிப்பதாலும் நகரமயமாக்கும் நடவடிக்கையாலும் அந்தப் பகுதியில் பல முறை நிலச்சரிவுகள் நிகழ்ந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.