மன்னாரில் பொலிஸாரின் வாகனம் மோதியதில் மூவர் படுகாயம்.

மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னார் பகுதிக்கு மோட்டார் சைக்கிலில் வந்தவர்களும், மன்னார் பஸார் பகுதியூடாக பயணித்த பொலிஸாரின் வாகனமும் மோதியே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 67 வயதுடைய கணவன் அவருடைய மனைவி மற்றும்,அவர்களுடன் வருகை தந்த 6 வயது சிறுமி ஆகியோர் காயங்களுக்கு உள்ளான நிலையில் உடனடியாக மக்களின் உதவியுடன் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டன்.