சென்னை தி. நகர் உள்ள குமரன் சில்க்ஸ் கடைக்குச் சீல் வைத்தனர்.
கொரோனா பரவல் இந்தியாவில் குளிர்காலத்தில் 2வது அலையின் தாக்கத்தைத் தடுக்க முடியாது என்று மத்திய நிபுணர் குழுத் தலைவர் வி.கே. பால் கூறியுள்ள நிலையில் விதிமுறை தளவுகளைப் பின்பற்றாமல் தமிழகத்தின் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணம் தமிழக அரசு அனைத்து கடைகளுக்குக் குறிப்பாக ஜவுளிக்கடைகளுக்கு பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள குமரன் சில்க்ஸ் துணிக்கடையில் தீபாவளி பண்டிகைக்கான தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் குமரன் சில்க்ஸ் கடையில் அதிகமாக மக்கள் குவிந்திருக்கிறார்கள். எவ்வித தனி மனித இடைவெளியும் பின்பற்றாமல் முகக்கவசங்களை ஒழுங்கே அணியாமல் மக்கள் கூடுவதை அனுமதிதத்ததால் குமரன் சில்க்ஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடைக்குள் இருந்த ஊழியர்களை அப்புறப்படுத்தி கடைக்கு சீல் வைத்தனர்.
ஏற்கனவே கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்று பல முறை மாநகராட்சி குமரன் சில்ஸ் நிர்வாகத்துக்கு எச்சரித்து விடுத்துள்ளது. இந்த நிலையில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியதால் சென்னை மாநகராட்சி இன்று கடைக்குச் சீல் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.