மறைந்த மாவை சேனாதிராஜாவின் உடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார். (Video)

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் உடலுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
நேற்று (31) பிற்பகல் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி, உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஒரு குழுவினரும் ஜனாதிபதியுடன் இணைந்தனர்.