பதிலுக்குப் பதில் – அமெரிக்காவுக்குப் புதிய வரி – கனடா
கனடிய ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதிக்கும் புதிய வரிக்குப் பதிலடியாக கனடாவும் அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதிக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கூறியுள்ளார்.
சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளின் இறக்குமதிகளுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) புதிய வரி விதித்துள்ளார்.
155 பில்லியன் கனடிய டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்களுக்குத் தமது அரசாங்கமும் 25 விழுக்காடு வரி விதிக்கும் என்று திரு ட்ரூடோ சொன்னார்.
30 பில்லியன் கனடிய டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருள்களுக்கான வரி செவ்வாய்க்கிழமை (4 பிப்ரவரி) நடப்புக்கு வரும் என்றார் அவர்.
மேலும் 125 பில்லியன் கனடிய டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருள்களுக்கான வரிகள் இன்னும் 21 நாள்களில் நடப்புக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய வரிக்கு ஏற்பச் செயல்பட அமெரிக்க நிறுவனங்களுக்குக் கனடா அவகாசம் தருவதாக BBC தெரிவித்தது.