சீனா, மெக்சிகோ, கனடாவுக்குப் புதிய வரிகள்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump), சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளுக்கு அதிகாரபூர்வமாகப் புதிய வரிகளை விதித்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேற்றம், Fentanyl போதைப்பொருள் தொடர்பான தேசிய அவசரநிலை முடிவுறும் வரை புதிய வரிகள் நடப்பில் இருக்கும் என்று அதிபர் டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவுக்கான தனது ஏற்றுமதிக்கு 25 விழுக்காட்டு வரி விதிப்பு செவ்வாய்க்கிழமை (4 பிப்ரவரி) நடப்புக்கு வரும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளதாக கனடிய அதிகாரிகள் கூறினர்.
மெக்சிகோவுக்கு அதேயளவும், சீனாவுக்குப் 10 விழுக்காடும் வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது.
புதிய வரிகளைக் குறித்து கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) விரைவில் செய்தியாளர் சந்திப்பை நடத்தவிருக்கிறார்.
புதிய வரிகள் விதிப்பது, அமெரிக்கக் குடும்பங்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டபோதிலும் அதை நடப்புக்குக் கொண்டுவந்துள்ளார் அதிபர் டிரம்ப்.