மெகா சீட்டிங்! இந்திய அணி 12 பேருடன் ஆடியதால் எழும் கடும் விமர்சனம்!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில், இந்தியா வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. இப்போட்டியில், இந்திய அணியில் 12 வீரர்கள் விளையாடியிருப்பது, கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4ஆவது டி20 போட்டி, புனேவில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்தபோது ஷிவம் துபே பேட்டிங் செய்தார். அப்போது, அவரது தலையில் ஹெல்மெட் பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் பேட்டிங் செய்தார். இருப்பினும், பீல்டிங் செய்யும்போது துபே பேட்டிங் ஆடவில்லை. தலையில் அடிப்பட்டது எனக் கூறியதால், ஐசிசி விதிமுறைப்படி அவருக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார்.
ராணா அபாரமாக பந்துவீசி லிவிங்ஸ்டன், பெத்தெல், ஓவர்டன் ஆகியோரது விக்கெட்களை சாய்த்தார். துபேவுக்கு மாற்றாக முதலில் ரமன்தீப் சிங்தான் சேர்க்கப்பட்டார். பிறகு, ராணாவை சேர்த்தனர். இது கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.