மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கார் மோதியதில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 5 பேர் காயம், ஓட்டுநர் கைது!
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கார் மோதியதில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரை இறக்கிவிடுவதற்காக சொகுசு கார் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை வந்தது.
அப்போது டெர்மினல் 2 வாகன நிறுத்துமிடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் அங்கிருந்தவர்கள் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார். சஹார் காவல் நிலைய அதிகாரி கூறியதாவது, காரை நவி மும்பையில் வசிக்கும் பரசுராம்(34) ஓட்டி வந்தார்.
அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காகவும், அலட்சியமாக இருந்ததற்காகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த ஐந்து பேரில் 2 வெளிநாட்டினர் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மூன்று விமான நிலைய பணியாளர்கள் கூப்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர.
விசாரணையின் ஒரு பகுதியாக கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ஓட்டுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணையும் நடைபெற்று வருகிறது