எனது ஜனாதிபதி செலவினப் பட்டியலை 50% குறைக்க நான் தயார் – ஜனாதிபதி அனுர.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் செலவுகள் ஐம்பது சதவீதத்தால் குறைக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களுக்கு சுமையாக இல்லாத அரசாங்கத்தை உருவாக்குவதே நோக்கம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இந்த மண்ணில் மீண்டும் இனவாதத்திற்கோ அல்லது மதவாதத்திற்கோ இடமில்லை என்று ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார். குருநாகல் பகுதியில் நடைபெற்ற நட்புறவு சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.