ஆஸ்திரேலியாவில் பருவநிலை அதிர்ச்சி – ஒருபுறம் வெள்ளம், மறுபுறம் கடும் வெப்பம்!
ஆஸ்திரேலியாவைக் கடும் வானிலை வதைக்கிறது.
குவீன்ஸ்லந்து மாநிலத்தின் வட பகுதியில் கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் மாண்டார்.
உயர்வான பகுதிகளுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இன்று (2 பிப்ரவரி) மதியத்துக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு டவுன்ஸ்வில் நகர மக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அங்குள்ள 6 பகுதிகள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மற்றப் பகுதிகளில் கடும் வெப்பம்.
மெல்பர்ன் உள்ளிட்ட விக்டோரியா மாநிலத்தின் பல பகுதிகளை வானிலை சுட்டெரிக்கிறது.
வெப்பநிலை 40 டிக்ரி செல்சியஸை எட்டும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அடுத்த வார இறுதிவரை இந்த நிலை தொடரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.