இலங்கையில் முதலீடு செய்ய தனது உடன்பாட்டை வெளிப்படுத்திய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் !
இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட் தூதர் காலித் அல் அமேரி இடையே நடைபெற்ற சிறப்பு சந்திப்பின் போது இது தெரியவந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில், இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட் தூதர் விமான முனையத்தில் முதலீடு செய்வதற்கான தனது ஒப்புதலையும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்த மாத நடுப்பகுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயம் குறித்தும் தூதர் , அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடன் கலந்துரையாடியதாக அமைச்சகம் அறிவித்துள்ளது.