மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்த கடைசிப் படத்திற்கான தலைப்பை வெளியிட்ட விஜய் சேதுபதி.
மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நடித்த கடைசிப் படத்திற்கான தலைப்பை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு ‘ஆர்.பி.எம்.’ என பெயரிடப்பட்டுள்ளது. கோவை சரளா, ஒய்.ஜி. மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி, சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் கிரைம், சஸ்பென்ஸ், திரில்லர் வகையில் உருவாகியுள்ளது.
இசை அமைப்பாளராக ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ. விரைவில் படத்தின் டீசர் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.