மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இலங்கையின் 77 வது சுதந்திர தின நிகழ்வு.

‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையின்   77 ஆவது சுதந்திர தினம் இன்று ச(4.02) செவ்வாய்க்கிழமை இலங்கை முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

அந்த வகையில் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வானது இன்று(4) மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு க. கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

சுதந்திரதின நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக அனைத்து சமயம் சார்ந்த வழிபாடுகள் காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது அதனை தொடர்ந்து 8.05 மணிக்கு தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது மேலும் அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்களால் சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன.


தொடர்ந்து காலை 8.09 மணிக்கு நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த தேசாபிமானிகளுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து ஜனாதிபதி அனுரகுமார திஸநாயக்க அவர்களின் 77 ஆவது சுதந்திரதின சிறப்புரையினை காணொளியாக அனைத்து உத்தியோகத்தர்களும் மாவட்ட செயலக மருதம் மாநாட்டு மண்டபத்தில் பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் சிறப்பாகச் சேவையாற்றிய மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபரினால் மெச்சுரை வழங்கிவைக்கப்பட்டதுடன், இல்லவிளையாட்டுப் போட்டிக்கான கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன. இறுதியாக மாவட்டச் செயலக வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன .

 

குறித்த நிகழ்வில் மாவட்டச் செயலக அதிகாரிகள் மற்றும்  உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். .

Leave A Reply

Your email address will not be published.