அரசாங்கம் நெல் உத்தரவாத விலையை அறிவித்தது!
அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்று அறிவித்தது.
அரசாங்கம் நெல்லை கொள்முதல் செய்யும் விலை குறித்து அறிவிப்பதற்காக இன்று (05) விசேட ஊடக சந்திப்பொன்று கூட்டப்பட்டிருந்தது. இதில் விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்படி, விவசாய அமைச்சர் கூறுகையில்
உலர்ந்த நாடு நெல் கிலோவை 120 ரூபாய்க்கும், சம்பா நெல் கிலோவை 125 ரூபாய்க்கும், கீரி சம்பா நெல் கிலோவை 132 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“அரிசி விலையையும் கருத்தில் கொண்டு… விவசாயிகளின் உற்பத்தி செலவையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என்று விவசாய அமைச்சர் கூறினார்.