சட்டமா அதிபர் சர்ச்சையிடையே , லசந்த விக்ரமதுங்கவின் மனைவிக்கு ஐநா சபையில் உயர் பதவி!

காலஞ்சென்ற ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி ஊடகவியலாளர் சோனாலி சமரசிங்க, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தில் மினிஸ்டர் கவுன்சிலராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் முதல் மனைவி ஊடகவியலாளர் ரெயின் விக்ரமதுங்க மற்றும் அவருடன் பிறந்த லசந்த விக்ரமதுங்கவின் மூன்று குழந்தைகளும் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை கோரி உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

16 ஆண்டுகளுக்கு முன்பு பொதுவெளியில் கொல்லப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் சந்தேக நபர்களை விடுவிக்க சட்டமா அதிபர் பரிந்துரைத்திருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லசந்த கொலை வழக்கு: சந்தேக நபர்களை விடுவிக்க சட்டமா அதிபர் பரிந்துரை
https://www.ceylonmirror.net/168737.html

Leave A Reply

Your email address will not be published.