லசந்த கொலை வழக்கு: சந்தேக நபர்களை விடுவிக்கும் சட்டமா அதிபரின் கடிதம் குறித்து அரசு அதிர்ச்சி.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-05-at-20.09.29_449e07d1.jpg)
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பாக சந்தேக நபர்கள் மூவரை விடுவிக்க சட்டமா அதிபர் வெளியிட்ட கடிதம் குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சட்டமா அதிபதியின் இந்த முடிவு குறித்து விரைவில் உரிய பதில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.