கழுத்தை அறுத்து தீ வைத்து கொலை!
ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலகொல்ல பகுதியில் உள்ள வீட்டில் ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்து தீ வைத்து கொலை செய்துள்ளதாக ராகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொல்லப்பட்டவர் தலகொல்ல, ராகம பகுதியைச் சேர்ந்த 76 வயது பெண் ஆவார்.
கொல்லப்பட்டவர் தனது கணவருடன் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த நேரத்தில் கணவர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பிய கணவர் மனைவியைத் தேடியபோது கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
சடலம் ராகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.