சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டருக்கு பொலிஸ் துப்பாக்கிச் சூடு! ஒருவர் கைது!
நேற்று (06) யாழ்ப்பாணம் குருநகர் பொலிஸார் சட்டவிரோதமாக மணல் கடத்திக் கொண்டிருந்த டிராக்டர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
குருநகர் பகுதியில் உள்ள ஒரு ஆற்றில் இருந்து உரிமம் இல்லாமல் மணல் வெட்டி சட்டவிரோதமாக கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுவினர் அங்கு சென்றபோது, மணல் ஏற்றப்பட்ட டிராக்டர் அதிவேகமாக ஓடத் தொடங்கியது.
டிராக்டரை நிறுத்த பொலிஸார் சைகை செய்தும் அது நிற்காமல் சென்றதால், பொலிஸார் டிராக்டரின் பின்புறம் துப்பாக்கிச் சூடு நடத்தி அதை நிறுத்தியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் டிராக்டரில் இருந்த மூவரில் இருவர் கீழே குதித்து தப்பி ஓடியுள்ளனர். டிராக்டர் சாரதியை கைது செய்ய முடிந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
குருநகர் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரையும் டிராக்டரையும் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.