வித்யா கொலை வழக்கில் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு விசாரணைகளுக்கு திகதி குறிப்பு.
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250206-WA0026.jpg)
யாழ்ப்பாணம் புங்குடுதீவில் வசித்து வந்த பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யா கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளையும் விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டது.
அதன்படி, தொடர்புடைய மனுக்களின் விசாரணை ஆகஸ்ட் 25ஆம் திகதி தொடங்க உள்ளது.
பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் முன் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் அழைக்கப்பட்டன.