காலைசிற்றுண்டியில் பல்லி இறந்து கிடந்தை பாா்க்காமல் சாப்பிட்ட 14 மாணவ,மாணவிகள் சிகிச்சைக்காக நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதி
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/Screenshot_2025-02-06-22-04-22.png)
நீடாமங்கலம்: நீடாமங்கலம் அடுத்த நரசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை காலை (பிப்.6) மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட காலைசிற்றுண்டியில் பல்லி இறந்து கிடந்தை பாா்க்காமல் சாப்பிட்ட 14 மாணவ,மாணவிகள் சிகிச்சைக்காக நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் நரசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை (பிப்.6) காலை மாணவ, மாணவியர்கள் 14 பேருக்கு காலைசிற்றுண்டியாக பொங்கல்,சாம்பார் வழங்கப்பட்டது.
மாணவர்கள் சாப்பிட தொடங்கினர். பொங்கலில் பல்லி இருப்பதை பார்த்த தலைமை ஆசிரியர் மயில்வாகணன் மாணவர்கள் சாப்பிடுவதை நிறுத்ததிவிட்டு உடனடியாக அனைவரையும் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு மாணவர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சையை மருத்துவ அலுவலர் ஜெயக்குமாரி அளித்தார்.
தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன், மாணவர்களிடம் நலம் விசாரித்தார்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்மணி,வட்டாட்சியர் தேவகி,வட்டாரவளர்ச்சி அலுவலர் விஜயலெட்சுமி,வட்டார கல்வி அலுவலர்கள் சம்பத்,மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.