இன்ஃபோசிஸ் 500 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாகத் தகவல்
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/Screenshot_2025-02-07-21-03-12.png)
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் மைசூர் வளாகத்தில் பணியாற்றி வரும் சுமார் 500 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் அனைவரும் கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் பணியில் சேர்ந்தவர்கள் என்றும், ஒரு சில மாத பயிற்சிக் காலத்திலேயே இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நிறுவனத்தின் பயிற்சி முடிந்து. சில தொடர்ச்சியான உள் தேர்வுகளில், இவர்கள் தோல்வியடைந்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் கூறப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.