STF தளபதி பதவியில் இருந்து வர்ண ஜயசுந்தர நீக்கம்; புதிய தளபதியாக சமந்த டி சில்வா நியமனம்

பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வா பெப்ரவரி 12 முதல் சிறப்பு அதிரடிப் படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு நேற்று முன்தினம் (06) பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைத்தது.
மேலும், தற்போது சிறப்பு அதிரடிப் படையின் தளபதியாக பணியாற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வர்ண ஜயசுந்தர கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தற்போது கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக செயற்படும் அஜித் ரோஹண வடமேற்கு மாகாணத்திற்கும், வடமேற்கு மாகாணத்தின் பொலிஸ் தலைவராக செயற்படும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிரி ஜயலத் தென் மாகாணத்திற்கும், தென் மாகாணத்தின் பொலிஸ் தலைவராக செயற்படும் மஹேஷ் சேனாரத்ன ஊவா மாகாணத்திற்கும் இடமாற்றம் செய்ய ஒப்புதல் கிடைத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
100க்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையத் பொறுப்பதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதுடன், இவ்வாறு இடமாற்றம் செய்யப்படும் பல பொலிஸ் நிலையத் பொறுப்பதிகாரி பதவி பறிபோய் சாதாரண பணிகளுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.