அரசியல் நியமனங்கள் குறித்து அரசாங்கத்திற்கு வெளிநாட்டு சேவை சங்கம் கவலை

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு செய்யப்படும் அரசியல் நியமனங்கள் குறித்து இலங்கை வெளிநாட்டு சேவை சங்கம் ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாக அந்த சங்கம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
தொழில்முறைவாதம், திறமை அடிப்படையிலான நியமனங்கள் மற்றும் ராஜதந்திர நிபுணத்துவத்தின் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளை புறக்கணித்து, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் தலைமை பதவிகளில் பலவற்றிற்கு இலங்கை வெளிநாட்டு சேவையில் இருந்து வெளியே சமீபத்தில் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் சங்கம் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது.
மேலும், இந்த நியமனங்கள் 2024 அரசாங்க தேர்தல் கொள்கை பிரகடனத்தை நேரடியாக மீறுவதாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.