டெல்லியில் பாரதிய ஜனதா வெற்றி.

இந்தியாவின் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிபெற்றுள்ளது.
சுமார் 30 ஆண்டு இடைவெளிக்குப்பின் பாரதிய ஜனதா கட்சி டெல்லியில் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக The Hindu நாளிதழ் தெரிவித்தது.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாரதிய ஜனதா 44 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
மேலும் அது 4 இடங்களில் அது தொடர்ந்து முன்னிலை வகிப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் இணையத்தளம் சொல்கிறது.
டெல்லியில் ஆட்சி செய்த ஆம் ஆத்மி கட்சி 21 இடங்களை வென்றது. மேலும் 1 இடத்தில் முன்னிலை வகிக்கிறது.
டெல்லியின் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அதிஷி மக்களின் முடிவை ஏற்பதாகக் கூறினார்.
தேர்தல் தோல்வி ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு என்று அவர் சொன்னார்.
தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.