தமிழ்நாட்டை சேர்ந்த சிறுவன் 5 நிமிடத்தில் 92 ஆங்கில வாக்கியத்தை தலைகீழாக படித்து சாதனை!

தமிழ்நாட்டை சேர்ந்த சிறுவன் 5 நிமிடத்தில் 92 ஆங்கில வாக்கியத்தை தலைகீழாக படித்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவன்
காஞ்சிபுரம் அருகே உள்ள ஏகனாம்பேட்டையை சேர்ந்த பாலசுப்ரமணியம்- வித்யாலட்சுமி தம்பதி தற்போது சென்னை அண்ணாநகர் கிழக்கில் வசித்து வருகிறார்கள்.
இவர்களது மகன் பி. அஸ்வந்த் (வயது 11). இவர் தற்போது அரபு நாடான கத்தாரில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ஆங்கிலத்தில் அதிக ஆர்வம் மிகுந்த மாணவனாக இருக்கும் அஸ்வந்த் ஆங்கில வாக்கியங்களை தலைகீழாக வேகமாக படிப்பதில் திறமை வாய்ந்தவர்.
தற்போது அஸ்வந்த் 5 நிமிடங்களில் 92 ஆங்கில வாக்கியங்களை தலைகீழாக படித்து சாதனை படைத்துள்ளார்.
மாணவனின் இந்த சாதனை நிகழ்வு India Book of Recordல் இடம் பெற்றுள்ளது.