இலங்கை முழுவதும் தற்போது மின்சார தடை!

நாடு முழுவதும் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் வினவியபோது, நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருவதாகவும், அதற்கான காரணம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
குறித்த திடீர் மின்வெட்டை சரிசெய்ய 4 முதல் 6 மணி நேரம் ஆகுமென மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் மின் தடை: நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தி நிலையமும் ஸ்தம்பிப்பு
நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதையடுத்து நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தி நிலையமும் ஸ்தம்பித்துள்ளது.
எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை தகவல் இல்லை.
நுரைச்சோலை மின் நிலையத்தில் உள்ள மூன்று உற்பத்தி இயந்திரங்களும் ஒரே நேரத்தில் ஸ்தம்பிப்பது இதுவே முதல் முறை.
இதனால் நாடு முழுவதும் மின்சாரத்தை சீராக்க சில மணி நேரம் அல்லது அதற்கு மேல் ஆகலாம் என்று கூறப்படுகிறது.