சட்டமா அதிபரை ராஜினாமா செய்ய அரசு அழுத்தம்.

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்க அரசாங்கம் சதியில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டமா அதிபரை பதவி விலகுமாறு ஏற்கனவே அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இது சட்டமா அதிபர் துறையை முழுமையாக அரசியல்மயமாக்கும் முயற்சி என்றும், இது முற்றிலும் தவறான செயல் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்தப் பிரச்சினைகள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும்போது, அவற்றை அடக்குவதற்கு அரசாங்கம் வேறு பட்டியல்களைக் கொண்டு வருகிறது என்று அவர் ஒரு ஊடக மாநாட்டில் மேலும் கூறினார்.