பொலிஸ் துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களை எடுத்துக்கொண்டு துபாய் தப்பி ஓடிய பொலிஸ் கான்ஸ்டபிள்.

கல்கீசை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 2025.02.08 அன்று மாலை 06:00 மணி முதல் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியே ஒரு இடத்தில் வாகனத் தணிக்கை பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்.
அதன்படி, இந்தப் பணிக்காகச் செல்வதற்காக மாலை 05:30 மணியளவில் கல்கீசை பொலிஸ் நிலையத்திற்கு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள், T56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களை நிலையத்தில் இருந்து பெற்றுக்கொண்டு பணி இடத்திற்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இருப்பினும், பொலிஸ் கான்ஸ்டபிள் சம்பந்தப்பட்ட வாகனத் தணிக்கையில் பணியில் ஈடுபடாததால், அவரைத் தேடியபோது, அவரது கைபேசி செயல்படவில்லை.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், இந்த 25 வயதுடைய அனுராதபுரத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் 2025.02.08 அன்று இரவு 10:15 மணியளவில் விமானம் மூலம் துபாய் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக சர்வதேச பொலிஸ் ஊடாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், அவர் பொலிஸ் நிலையத்தில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் சென்ற T56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களை மீண்டும் பொலிஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தற்போது 04 விசாரணை குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.