பிணையாளிகளையும் , கைதிகளையும் கண்ணியமாகப் பரிமாற்றம் செய்துகொள்ளவேண்டும் : செஞ்சிலுவைச் சங்கம்.

காஸாவில் பிணையாளிகள் – பாலஸ்தீனக் கைதிகள் பரிமாற்றச் சூழல் குறித்து செஞ்சிலுவைச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
வருங்காலத்தில் இருதரப்பினரும் கண்ணியமாக, தனிப்பட்ட முறையில் பரிமாற்றம் செய்துகொள்ளும்படி அது கேட்டுக்கொண்டது.
முன்னதாகக் காஸாவிலிருந்து ஹமாஸ் மேலும் 3 பிணையாளிகளை விடுவித்தது. பதிலுக்கு இஸ்ரேல் 183 பாலஸ்தீனக் கைதிகளுக்கு விடுதலை அளித்தது.
ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பேரணி நடத்தி மூன்று பிணையாளிகளை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தனர்.
பிணையாளிகள் மூவரும் மெலிந்து காணப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.
இஸ்ரேல் விடுதலை செய்த பாலஸ்தீனக் கைதிகளில் 7 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவிலிருந்து திரும்பிய இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு(Benjamin Netanyahu) பிணையாளிகள் நடத்தப்பட்ட விதத்துக்காகக் கோபப்பட்டார்.